என் அவன்பாவப்பட்ட என் மனசு 
அவன் பாசத்துக்கு 
வாக்கப் பட்டு;;;
பசி,தூக்கம் இல்லாம 
பைத்தியம் போல 
அலையவிட்ட,,, 
அவன் 
எங்கிருந்தோ வந்தானோ???
எனக்கு 
ஏன் அன்பைத் தந்தானோ???

ஏந்தி நிற்கவில்லையே
அவனிடம்;;;
இப்போ
ஏங்கித் தவிக்க விட்டானே
தனிமையுடன்...


யாமிதாஷா...

மௌனம் வேண்டாமே!

மனதில் உள்ளதை 
பகிர்ந்து விடுங்கள்; 
மௌனமாய் மட்டும் 
இருந்து விடாதீர்கள்; 
மௌனத்தின் இரைச்சலை 
நம்மால் தாங்க முடியாது...

தோல்விநான்
தோற்றுப்போனேனடா;
உன்னை
காதலிப்பதில் அல்ல,
என்னை
காதலிக்க வைப்பதில்...


முகவரி...


என்னை 
நீ வெட்டிப்
போட்டிருந்தால் கூட
கூடித் தின்ன
ஒரு நாயும் 
வந்திருக்காது...

என்னை நீ 
கொன்றிந்தால் கூட
கூட்டம் என்னவோ
குறைவாய் தான் 
இருந்திருக்கும்...

என்னை நீ 
அதிகப்படியான
வார்த்தைகளால் 
அசிங்கப்படுத்தி இருந்தால் கூட
மறுபடியும் வந்து
"உன்னை நேசிக்கிறேன்"
என்று தான் கூறி இருப்பேன்...

வெற்றுக்காகிதம் என்னை 
வேரோடு மாற்றி 
வேகக் கவிதாயினி ஆக்கினாய்...

ஒன்றை மட்டும் 
புரிந்து கொள்
என்னவனே!
நீ பிரிந்து 
போனதால் மட்டும்
என் காதல்
அழிந்து விடும் என்ற
எண்ணத்தை மறந்து விடு...

மரணப்படுக்கையிலும் 
என் இதயத்தின்
கடைசி துடிப்பு நின்றாலும்,
உன் நினைவுகளை சுமந்து
உனக்காய் கண்ணீர் வடித்த
என் காதலின் நினைவுகள்
உன்னைச் சுற்றியே இருக்கும்;
உன்னை இன்னும் அதிகமாய்
காதலித்த படி...


யாமிதாஷா... 

காதலிக்கிறேனடா உன்னை...

உன் கழுத்தில் - கத்தி
வைத்தா?கேட்டேன்;
என் கழுத்தில்
மாலையிடவா என்று 
இல்லையே!!!

உன்னுடன் சேர்ந்து 
ஊர் சுற்றவா 
விரும்பினேன்;
இல்லையே!!

நீ பார்த்திருக்க
வேண்டாம்;
உன் பரிசுப் பொருட்கள்
வேண்டாம்;

பகல் இரவாய் 
கொஞ்சல்களும்;
பக்கம் பக்கமாய்
கடிதங்களும் வேண்டாம்,,,நீ என்னை நேசிக்க கூட
வேண்டாம்...

நான் உன்னை
காதலிப்பதையும் -உனக்காய்
காத்திருப்பதையும்
தடுக்காமல் இருந்தாலே
போதுமடா...அதுவே என் காதலுக்கு 
வெற்றி தான்...

வெற்றி...


முன்னால் நிற்கும் 
மரங்களை எல்லாம்
முந்திக் கொண்டு
செல்கிறேன்;
காலை நேர
நடை பயணத்தில்...

என் தேவதை

அவன் நிழல் விழும் 
இடத்தில் கூட;
என் பாதம் படுவதை
நான் விரும்பவில்லை,,,
என் தேவதைங்க அவன்...சந்தோஷம்


நீ விலகி போனால்;
நான் உன்னை
விட்டு போவேன்
என நினைத்தாயா?
இல்லை என்னவனே!
தள்ளி நின்று ரசிக்கிறேன் 
நானில்லாமல்
நீ சந்தோஷமாய் வாழ்வதை...
கோபக்காதல்


நானும் கோழை தான்;;;
அவன் எத்தனை
வெறுத்தாலும்,,,

எனக்கு கோவப்படவே
தெரியவில்லையே???

வெட்கம்

அப்படி பார்க்காதேடா;
பகல் இரவு பாராமல் 
பூத்து விடுகிறது,,,
வெட்கம்...
பூந்தோட்டம்

என் இதயமானது...
அழகான
பூந்தோட்டமாகிப் போனது 
வாடாமல்;;;
அவன் நினைவுகள்
தினம் மலர்வதால்...கல்லறை காதல்...

உன் மனைவியிடம்
காட்டு;;;
என்னை கன்னா
பின்னாவென்று,,,
காதலித்தவளின்
கல்லறை
அதோ என்று...


அவன் நினைவுகளுடன் நான்...

அனைத்தையும்
கற்றுத் தந்தான்
எனக்கு;;;
அவனில்லாமல்
தனிமையில்
எப்படி வாழ்வது
என்பதையும் சேர்த்து...

யாமிதாஷா...

மழையாய் நீ...

மழையாய் வருவது
நீ எனத் தெரிந்தால் 
என்னவனே!
அதில்
என் உடல் தொடங்கி
உயிர் வரை
நனைப்பது;;; 

நானாக மட்டும் தான்

இருக்க வேண்டும்....


யாமிதாஷா...

பெண்மை ...

அவன் 
பார்வையாலே 
என் பெண்மையை 
பேச வைக்கிறான்.
நாணமாய்...

யாமிதாஷா...பார்வை...

அவனைக் 
காண வேண்டியே
வானம் தொடும் அளவிற்கு
வளர்ந்து செல்கிறது.
காட்டு மரங்கள்...

யாமிதாஷா

காதல்

இவள் நிறத்திற்கும் 
அவன் பணத்திற்கும் 
பொருத்தமே இல்லை! என்று 
பார்ப்பவர்கள் 
உணர்ந்து கொள்வதில்லையடா... 
நம் இதயத்தில் பிறந்த காதல்
உனக்கும் எனக்கும் 
இடையில் 
இன்னும் நம் குழந்தையாய் 
வாழ்கிறது என்பதை...

...யாமிதாஷா