கொஞ்சம் எட்டிதான் பாரேன்..

நீ மறந்து போனதால் 
இடிந்து போனது
பள்ளிக் கூடம்... ஆண் நிலா...

நிலவை காட்டி 
ஊட்டினாங்களா?
இல்ல நிலவையே 
உணவாக ஊட்டினாங்களா?
இப்படி வசீகரிக்கிறான்,
என்னை...
காதலனே!!!நான் அனுமனின் 
இதயம் அல்ல 
என் 
அன்பைக் காட்ட,,,
அழிந்து போகும் 
உடலையும் 
என்றுமே 
அழிந்து போகா 
உன் நினைவுகளையும் 
சுமந்து நடப்பவள்... 


                                   

                                         

வேதனை...

பூக்கள் கிள்ளியதால் 
அழுகிறேன் 
பூமி நனைய
ஏங்குகிறேன்,
கொலுசு ஓசையை கூட 
வெறுக்கிறேன்
கொடுமை இதுவென
உணர்கிறேன்,
என் உயிரை உருக்கும்
உன் வார்த்தைகளை
இன்னமும்
ஒத்திகை பார்க்கிறது
என் இதயம்...துணை நீயே...


என் 
பயணங்களில் எல்லாம் 
உன் துணை 
தேடுகிறேன் 
நானும் 
பயந்தவள் தானோ?கொஞ்சம் தரிசனம் கொடேன்...தெய்வத்தின் 
தரிசனம் வேண்டி 
தர தரவென
தரையினில் உருளும்
பக்தையைப் போல,,,
உன்னை காண வேண்டி
கட கடவென உருளுகிறது;

என் கரு விழிகள்...
நேசிக்கிறேன்...

உலகையே 
வெறுத்தேனடா,
அதற்கும் சேர்த்து 
உன்னை மட்டும் 
நேசிக்கிறேன்...


தயவுசெய்து...


"என் தேவதை நீயடா" புத்தக வெளியீட்டு விழா...

வணக்கம் நண்பர்களே,

கடந்த 16/08/2014  அன்று 
சென்னை கே.கே நகரில் உள்ள 
"டிஸ்கவரி புத்தக நிலையத்தில்" எனது 
மூன்றாவது புத்தகமான 
"என் தேவதை நீயடா" கவிதை தொகுப்பு,,, 
சிறப்பு விருந்தினர்கள் மற்றும் 
முகநூல் நண்பர்கள் தலைமையில் 
நடிகர் திரு.ரஞ்சித் அவர்கள் வெளியிட,,, 
புலவர்குரல் திரு.ராமாநுசம் அய்யா அவர்கள் 
பெற்றுக்கொள்ள, 
விழா சிறப்புற நடை பெற்றது...

கலந்து கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி...


யாமிதாஷா...வாழ்க்கை கொடு...

கூவி கூவி 
அழைக்கிறாள் 
பூக்காரி
அந்த பூவைத்தான் 
கொஞ்சம் 

வாங்கிக் கொடேன்
என்னோடு 
கொஞ்ச நேரமாவது; 
உன்னோடு 
வாழ்ந்து விட்டு போகட்டும்...

யாமிதாஷா...எதார்த்தம்...உயிரே...

அருகில் தெரிந்தும் 
அணைக்க முடியா;
நிலவு நீ...

வெயிலில் கிடைத்தும் 

பருக முடியா 
கானல் நீர் நீ...

நினைவில் வந்தும்
கலைந்து போகும்
கனவு நீ...

நிஜமாய் இருந்தும்
நினைவாய்க் கொல்லும்;
என் உயிரே நீயடா...
வெட்கம்...எனது 
கற்பனையெல்லாம் 
வீணாப் போகுது;;;
அவன் - என் 
கவிதைகளை 
கண்டு கொள்ளாமல்
போகும் போது...


பாராட்டு...ரசிக்கிறேன் உன்னை...

பெண்ணாய் பிறந்தாலே இப்படி ஒரு நிலை வருமோ??

நான் கொஞ்சம் அழகிய பெண் தான்,,,
ஆடை அலங்காரத்துடன் வீதியில்
நடந்து சென்று கொண்டிருந்தேன்.
32 வயது மதிக்கத்தக்க
ஒரு நபர் என் அருகில் வந்து ,,,
அவர் எஜமானரின் அந்தப்புரத்தை
அலங்கரிக்க அழைத்தார்...

நான் சிறிது பதட்டத்துடன்,,,
"அண்ணா" நீங்க நினைக்குற மாதிரி பொண்ணு
நான் இல்லை என்றேன்...
அண்ணா என்று
அழைத்ததைக் கூட பொருட்படுத்தாமல்
அவர் கூறினார்,,,
என் எஜமானர் உங்களுக்கு நெறைய
பொன்னும் பொருளும் அள்ளித் தருவார்;
வசதியாக வாழலாம் என்று...

நான் ஓடிவிட எண்ணி வழி தேடினேன்,,,
அதற்குள் இரண்டு மூன்று பேர் சேர்ந்து
என்னை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து
அவர்கள் எஜமானரின் முன் நிறுத்திவிட்டு
சென்று விட்டனர்...

அழகுக்கு குறை இல்லை எனினும்,,,
அவன் கோபமும் கொடூர எண்ணமும்
சேர்ந்து படு பயங்கரமாக
அவனை எனக்கு காட்டியது...

தப்பிக்க வழிதெரியாமல்
விழித்துக் கொண்டிருந்தேன்...
அவன் என் அருகில் வந்தான்,,,
அவன் காமப் பார்வையை
எனக்கு பிடிக்கவே இல்லை...
இதை விட கொடிது "அழகிய பெண்களை
அனுபவித்துக் கொல்வதே இவன் வேலை"யென்று
அவன் வார்த்தைகளில் தெரிந்து கொண்டேன்...

உயிர்போவதில் பயமில்லை,,,
இவன் என் உணர்வுகளை அல்லவா
சூறையாட நினைக்கிறான்...

அவன் என்னை நெருங்கி வர முற்பட்டான் ,,,
நான் என் பாதங்களை பின்னோக்கி நடந்தேன்...
கண்ணீர் வடித்தேன்,,, கடவுளை வேண்டினேன்...
அந்த கொடூரனின் கண்களில் கோபமும்,,,
காமமும் கொப்பளிக்கக் கண்டேன்...

இனி தப்பிக்க வழிஇல்லை என்ற நிலை வந்தது ,,,
உறைந்து போய் சுவரோடு ஒட்டியபடி
பயத்தில் கண்களை இருக்க மூடிக் கொண்டேன்...

திடீரென என் தோள்களை தட்டிய படி
ஒரு கை "இன்னும் எழும்பலையா நேரமாகிடுச்சு "என்று...

அடப்பாவமே,,,,

" நினைவுகள்  தான் நம்மள நிம்மதியா வாழ விடுறதில்லை" ணா;
இந்த "கனவுகள் கூட நம்மள நிம்மதியா தூங்க விடுறதில்லை"பா...

இப்படியெல்லாம் கனவு வந்தா எப்படி தான்
தூங்குறது...


(அடுத்த கனவில் சந்திக்கிறேன் :) )

அவரு எப்படி மறுபடியும் வந்தாரு???கோயம்புத்தூரில் இருந்து,,, 
தற்போது பெங்களூருக்கு வீடு  மாற்றம் 
செய்த எனக்கு,மனதில் ஒரு ஆசை 
என் சொந்த ஊருக்கு போக வேண்டுமென்று 
திடீரென்று புறப்பட்டு எங்கள் ஊரில் இருக்கும் 
என் அம்மாவின் பழைய வீட்டிற்கு போனேன்,,,

அந்த வீட்டில் யாரும் இல்லாததால் 
பூட்டி இருந்தது வெகு நாளாய்;;; 

நான் வீட்டை சுத்தம் செய்து முடிப்பதற்குள் ,,, 
மாலை நேரம் ஆனது,,, 
மணி 6 ஆகிற்றே விளக்கு ஏற்றலாம் என்று  
வத்திப்பெட்டியை தேடிக் கொண்டே இருந்தேன்...

திடீரென ஒரு வெளிச்சம் கையில் மெழுகுவர்த்தியுடன் 
ஒரு ஆண் என் முன்னாள் வந்து நின்றார்,,,

அவரை பார்த்து 5 வருடம் ஆனது ,,காரணம் 
அவர் 5 வருடத்திற்கு முன்பு தான் இறந்து போனார்,,, 
எனக்கு பயம் ஒரு புறம் ,,பதில் பேச வராத ஊமையாய் 
நான் சட்டென்று இங்கு எதற்கு வந்தாய்? எனக் கேட்டேன்...
அதற்க்கு அந்த நபர் இது நான் வாழ்ந்த வீடு ,,, 
இங்கு நீ எதற்கு வந்தாய் என்று கேட்டார்???

நானும் உடனே என் அம்மாவிற்கு 
அலைபேசியில் தொடர்பு கொண்டு 
இப்படியாக ஐந்து வருடத்திற்கு முன்பு இறந்து போன 
அந்த நபர் இங்கு வந்திருப்பதாகக் கூறினேன்,,,
அம்மாவும் "இவரு எதுக்கு அங்க வந்தாரு???"
அப்படிங்குற மாதிரி கேக்கவும்...

எங்க அம்மா கிட்டே சொல்லிட்டேன் என்ற கோபத்தில்,,
அந்த நபர் என்னோட துணிப்பை மற்றும்  என்
கைப்பையை தூக்கி வெளியே வீசினார்...

நீங்க என்ன சொல்லுறது நானே போறேன் என்ற படி 
அங்கிருந்து கிளம்ப தயாரானேன்...
பேசாமா மறுபடியும் பெங்களூருக்கே போய்டலாம்னு 
நினச்சுகிட்டே  நடந்தேன் ,,, 


இன்னமும் சந்தேகம் "அவரு எப்படி அங்க வந்தாரு???"


அவரு வேற யாரும் இல்லீங்க என் அம்மாவின் கணவர்...
அவர் இறந்து 5 வருஷம் ஆச்சு...

மறுபடியும் என்ன சுத்தி கன்னடத்துல பேசுற சத்தம் கேட்டுச்சு ,,
இவ்வளவு சீக்கிரம் பெங்களுர் வந்துட்டோமா???
என்னடா இது??? அப்படின்னு எழுந்து பாத்தா  மணி 5.30 ,,,

ஆகா நம்ம கண்டது கனவா??? 


அதானே பாத்தேன் "அவரு எப்படி மறுபடியும் வந்தாருனு???" :)காதல் தின ரோசா...


காத்திருக்கேன்,காத்திருக்கேன் 
கண்ணாலே காதல் சொல்லி 
கண்ணாலமும் பண்ணிகிட்ட 
என் பட்டிக்காட்டு மாமாவுக்கு;;; 
பந்தியிலே அமர வச்சு
பக்குவமா சேதி சொல்ல!
வச்ச கண்ணு வாங்காம
நீ வரும் பாதைய
பாத்திருக்கேன்,,,
சந்தையில கூவி கூவி
தங்கம் விலை
சொல்லி சொல்லி,,,
நாம நட்டு வச்ச
ரோசாவெல்லாம்
துட்டு போட்டு விக்கிறாங்க;
கேட்டாக்க ,,,
பட்டணத்துல
காதல் சொல்ல
காசு வேணுமாம்,,,
கூடவே கை நிறைய
ரோசும் வேணுமாம்...ஏற்றுக்கொள்...

என் கனவுகளை
கரைத்து விட்டான்;
இதயத்தில்
உறைந்து விட்டான்;
உயிரோடு
கலந்து விட்டான்;
எத்தனை
பெண் கண்கள்
கவனிக்க மறந்ததோ?
அவன் என் கண்ணில்
வந்து விழுந்து விட்டான்...
என் அன்னையின்
ஆண் உருவம்
அவனாய்,,,
என் உலகின்
ஆண் தேவதையாய்...
ஏற்றுக்கொள்
அன்பே!
என் மனதார
உன்னை காதலிப்பதை...

*** யாமி ***


ரசிப்பு...
அவனை
அதிகமாய் ரசித்த
என் கண்களுக்கு;
கோபமாய்
கரியை பூசினேன்
இறுதியில் -உன்
மை இட்ட கண்கள்
அழகு என்று
என்னை ரசிக்க
தொடங்கிவிட்டான்...

*** யாமி ***

ஆணை இடு அன்பே!!!
ஆணை இடு அன்பே! 
உனக்காய் அத்தனையும் செய்ய காத்திருக்கிறேன்..

பலாயிரம் கோடிஆண்டுகளாக 
மறைந்திருந்த புதையல் போல,,,
பால் வண்ணம் மாறா நிலவு போல;;;
பக்கம் பக்கமாய் எழுதிய கவிதை போல,,
கேட்டதெல்லாம் கிடைக்கும் மந்திரம் போல;;;
கொஞ்ச வரும் குழந்தை குடியிருக்கும் கருவறை போல ;;;
தஞ்சம் என்றும் வருவாரை வாழ வைக்கும் தலைவன் போல,,, 
வாடாமல் சிரிக்கும் வண்டுகள் மொய்க்கும் மலரை போல;
என் வானமெல்லாம் இளஞ்சிவப்பாய்,,,
வார்த்தையில் எல்லாம் இனிப்பாய்;;;
என்னை வாழ வைத்தவனே!

ஆணை இடு அன்பே!
உனக்காய் அத்தனையும் செய்ய காத்திருக்கிறேன்...


*** யாமி ***
பிரிவின் வலி...

என் வலியால்
வெளிவரும் வார்த்தைகள்
ஒரு நாள் சொல்லும்;;;
இத்தனைக்கும்
உன்னை நேசித்த
அவள் இன்று
இல்லாமலே போனாள்
என்று...


*** யாமி ***

மகிழ்ச்சி

ஆடிக் களிக்கிறேன்;;;
அவன் அன்பில்
திளைக்கிறேன்
கொட்டும் வெயிலில்
நனைகிறேன்;
சுட்டுவிடும் மழையில்
குளிக்கிறேன்;
எதற்கும்
துணிந்து விட்டேன்,,,
எமனே வந்தாலும்
கை குலுக்கி
காப்பி கொடுப்பேன்...
அவன் என்னை
தேவதைங்குறாங்க...

*** யாமி ***நிலவு

அவன்
நிழல் படாத
நரகம் எனக்கு...

*** யாமி ***


நேரம் 

கடிந்து கொள்கிறேன் 
இந்த நேரத்தை;;; 
உன்னையும் என்னையும் 
பிரிக்கவே வாழுது போல...

 யாமி

அமிர்தம்வியர்வையிலேயே
குளித்து போயி
தேகமெல்லாம்
கருத்துப் போன
என் ஆசை மாமாவே;;;
கத்திரிக்காய் கடைசலோடு
கறியும் சோறும் சமைச்சு வச்சு,
உனக்கு பிடிச்சதெல்லாம்
செஞ்சு வச்சு;;;
ஆறிடாம பத்திருக்கேன்
ஆவலோடு காத்திருக்கேன்,,,
நீ மிச்சம் வச்ச பாத்திரத்தில்
உன் எச்சில் பட்ட
உணவை உண்டு;;;
ஆயுள் முழுதும் உன்னோடு
அன்பாய் வாழக் காத்திருக்கேன்...

யாமிதாஷா...
தெய்வத்தை கண்டேன்

நெடுந்தூர பயணம் ,,
மேனியெங்கும் சிலிர்ப்பு தேகம் தழுவும் தென்றலால்;;;
தாண்டி சென்றது என் கண்கள் அந்த காட்டுக்குள்
புதுப்பிக்க பட்டுக் கொண்டிருந்த
கோவிலைக் கண்டும்... மனம் கேட்கவில்லை யாருமே இல்லாத
இடத்தில் இப்படி ஒரு கோவிலா???அதுவும் எனக்கு பிடித்த அம்மன் வேற,,
தேவதை போல வந்தான்;;;கோயில் வரை வந்துட்டீங்க;வாங்க உள்ள போகலாம் என்ற படி...
 இனம் புரியாத நம்பிக்கை அவன்(ர்) தான் இருக்கிறானே,,தைரியமாய் இனி போகலாம் என்று உள்ளே சென்றேன்,,ஒருவரும் இல்லை ;பூசாரியைத் தவிர...
 நான்கு ,ஐந்து மின் விளக்குகள் ,,,பாதி முடிந்தும்,,,மீதம் முடியாமலும் நிலையில் சிற்பங்கள்,,,என் அம்மாவை சந்தித்தேன் ..நினைக்கவே இல்லை
இப்படி ஒரு தருணம் கிடைக்கும் என்று ,,,அவள் என்னை தனியே சந்திக்க் விரும்பினாள் போல,,,
அமைதியாய் நெடு நேரம் எங்கள் மௌனமே பேசியது போல்;;ஒன்றும் விளங்கவில்லை எல்லாம் எனக்கு சாதகமாய் நடந்தது;;;நான் மனதில் வேண்டியதற்கு எல்லாம்  சத்தமாய் பதில் சொன்னது போல கோவில் மணி ஒலித்தது... அழகாய் அவளே சிரித்தாள் ,,,இனி எதற்கும் கலங்காதே
இனி வரும் நாளெல்லாம் உன்னுடனே நான் இருப்பேன் என்ற படியே இருந்தது அவள் பார்வை...
அந்த அழகான தென்றலுக்கு இடையில் அமிர்தம் தின்றது போல இருந்தது
அந்த நிகழ்வு...
கொஞ்சம் பூவும் ,,,குங்குமமும் பூசாரியிடம் கொடுத்து என் மகளுக்கு கொடு என்று வாழ்த்தினாள் அவள்...
உன்னையே கண்டு விட்டேன் ;வேறென்ன வேண்டும் எனக்கு ,,,என்றும் என்னுடன் நீ இருக்கிறாய் என்ற தைரியத்தோடு புறப்பட தயாரானேன்...
அம்மாவைப் பார்க்க அழைத்துச் சென்ற என் தெய்வத்தோடு...


## யாமி ###