ஏற்றுக்கொள்...

என் கனவுகளை
கரைத்து விட்டான்;
இதயத்தில்
உறைந்து விட்டான்;
உயிரோடு
கலந்து விட்டான்;
எத்தனை
பெண் கண்கள்
கவனிக்க மறந்ததோ?
அவன் என் கண்ணில்
வந்து விழுந்து விட்டான்...
என் அன்னையின்
ஆண் உருவம்
அவனாய்,,,
என் உலகின்
ஆண் தேவதையாய்...
ஏற்றுக்கொள்
அன்பே!
என் மனதார
உன்னை காதலிப்பதை...

*** யாமி ***


ரசிப்பு...
அவனை
அதிகமாய் ரசித்த
என் கண்களுக்கு;
கோபமாய்
கரியை பூசினேன்
இறுதியில் -உன்
மை இட்ட கண்கள்
அழகு என்று
என்னை ரசிக்க
தொடங்கிவிட்டான்...

*** யாமி ***

ஆணை இடு அன்பே!!!
ஆணை இடு அன்பே! 
உனக்காய் அத்தனையும் செய்ய காத்திருக்கிறேன்..

பலாயிரம் கோடிஆண்டுகளாக 
மறைந்திருந்த புதையல் போல,,,
பால் வண்ணம் மாறா நிலவு போல;;;
பக்கம் பக்கமாய் எழுதிய கவிதை போல,,
கேட்டதெல்லாம் கிடைக்கும் மந்திரம் போல;;;
கொஞ்ச வரும் குழந்தை குடியிருக்கும் கருவறை போல ;;;
தஞ்சம் என்றும் வருவாரை வாழ வைக்கும் தலைவன் போல,,, 
வாடாமல் சிரிக்கும் வண்டுகள் மொய்க்கும் மலரை போல;
என் வானமெல்லாம் இளஞ்சிவப்பாய்,,,
வார்த்தையில் எல்லாம் இனிப்பாய்;;;
என்னை வாழ வைத்தவனே!

ஆணை இடு அன்பே!
உனக்காய் அத்தனையும் செய்ய காத்திருக்கிறேன்...


*** யாமி ***
பிரிவின் வலி...

என் வலியால்
வெளிவரும் வார்த்தைகள்
ஒரு நாள் சொல்லும்;;;
இத்தனைக்கும்
உன்னை நேசித்த
அவள் இன்று
இல்லாமலே போனாள்
என்று...


*** யாமி ***

மகிழ்ச்சி

ஆடிக் களிக்கிறேன்;;;
அவன் அன்பில்
திளைக்கிறேன்
கொட்டும் வெயிலில்
நனைகிறேன்;
சுட்டுவிடும் மழையில்
குளிக்கிறேன்;
எதற்கும்
துணிந்து விட்டேன்,,,
எமனே வந்தாலும்
கை குலுக்கி
காப்பி கொடுப்பேன்...
அவன் என்னை
தேவதைங்குறாங்க...

*** யாமி ***நிலவு

அவன்
நிழல் படாத
நரகம் எனக்கு...

*** யாமி ***


நேரம் 

கடிந்து கொள்கிறேன் 
இந்த நேரத்தை;;; 
உன்னையும் என்னையும் 
பிரிக்கவே வாழுது போல...

 யாமி

அமிர்தம்வியர்வையிலேயே
குளித்து போயி
தேகமெல்லாம்
கருத்துப் போன
என் ஆசை மாமாவே;;;
கத்திரிக்காய் கடைசலோடு
கறியும் சோறும் சமைச்சு வச்சு,
உனக்கு பிடிச்சதெல்லாம்
செஞ்சு வச்சு;;;
ஆறிடாம பத்திருக்கேன்
ஆவலோடு காத்திருக்கேன்,,,
நீ மிச்சம் வச்ச பாத்திரத்தில்
உன் எச்சில் பட்ட
உணவை உண்டு;;;
ஆயுள் முழுதும் உன்னோடு
அன்பாய் வாழக் காத்திருக்கேன்...

யாமிதாஷா...
தெய்வத்தை கண்டேன்

நெடுந்தூர பயணம் ,,
மேனியெங்கும் சிலிர்ப்பு தேகம் தழுவும் தென்றலால்;;;
தாண்டி சென்றது என் கண்கள் அந்த காட்டுக்குள்
புதுப்பிக்க பட்டுக் கொண்டிருந்த
கோவிலைக் கண்டும்... மனம் கேட்கவில்லை யாருமே இல்லாத
இடத்தில் இப்படி ஒரு கோவிலா???அதுவும் எனக்கு பிடித்த அம்மன் வேற,,
தேவதை போல வந்தான்;;;கோயில் வரை வந்துட்டீங்க;வாங்க உள்ள போகலாம் என்ற படி...
 இனம் புரியாத நம்பிக்கை அவன்(ர்) தான் இருக்கிறானே,,தைரியமாய் இனி போகலாம் என்று உள்ளே சென்றேன்,,ஒருவரும் இல்லை ;பூசாரியைத் தவிர...
 நான்கு ,ஐந்து மின் விளக்குகள் ,,,பாதி முடிந்தும்,,,மீதம் முடியாமலும் நிலையில் சிற்பங்கள்,,,என் அம்மாவை சந்தித்தேன் ..நினைக்கவே இல்லை
இப்படி ஒரு தருணம் கிடைக்கும் என்று ,,,அவள் என்னை தனியே சந்திக்க் விரும்பினாள் போல,,,
அமைதியாய் நெடு நேரம் எங்கள் மௌனமே பேசியது போல்;;ஒன்றும் விளங்கவில்லை எல்லாம் எனக்கு சாதகமாய் நடந்தது;;;நான் மனதில் வேண்டியதற்கு எல்லாம்  சத்தமாய் பதில் சொன்னது போல கோவில் மணி ஒலித்தது... அழகாய் அவளே சிரித்தாள் ,,,இனி எதற்கும் கலங்காதே
இனி வரும் நாளெல்லாம் உன்னுடனே நான் இருப்பேன் என்ற படியே இருந்தது அவள் பார்வை...
அந்த அழகான தென்றலுக்கு இடையில் அமிர்தம் தின்றது போல இருந்தது
அந்த நிகழ்வு...
கொஞ்சம் பூவும் ,,,குங்குமமும் பூசாரியிடம் கொடுத்து என் மகளுக்கு கொடு என்று வாழ்த்தினாள் அவள்...
உன்னையே கண்டு விட்டேன் ;வேறென்ன வேண்டும் எனக்கு ,,,என்றும் என்னுடன் நீ இருக்கிறாய் என்ற தைரியத்தோடு புறப்பட தயாரானேன்...
அம்மாவைப் பார்க்க அழைத்துச் சென்ற என் தெய்வத்தோடு...


## யாமி ###