துணை நீயே...


என் 
பயணங்களில் எல்லாம் 
உன் துணை 
தேடுகிறேன் 
நானும் 
பயந்தவள் தானோ?கொஞ்சம் தரிசனம் கொடேன்...தெய்வத்தின் 
தரிசனம் வேண்டி 
தர தரவென
தரையினில் உருளும்
பக்தையைப் போல,,,
உன்னை காண வேண்டி
கட கடவென உருளுகிறது;

என் கரு விழிகள்...
நேசிக்கிறேன்...

உலகையே 
வெறுத்தேனடா,
அதற்கும் சேர்த்து 
உன்னை மட்டும் 
நேசிக்கிறேன்...


தயவுசெய்து...


"என் தேவதை நீயடா" புத்தக வெளியீட்டு விழா...

வணக்கம் நண்பர்களே,

கடந்த 16/08/2014  அன்று 
சென்னை கே.கே நகரில் உள்ள 
"டிஸ்கவரி புத்தக நிலையத்தில்" எனது 
மூன்றாவது புத்தகமான 
"என் தேவதை நீயடா" கவிதை தொகுப்பு,,, 
சிறப்பு விருந்தினர்கள் மற்றும் 
முகநூல் நண்பர்கள் தலைமையில் 
நடிகர் திரு.ரஞ்சித் அவர்கள் வெளியிட,,, 
புலவர்குரல் திரு.ராமாநுசம் அய்யா அவர்கள் 
பெற்றுக்கொள்ள, 
விழா சிறப்புற நடை பெற்றது...

கலந்து கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி...


யாமிதாஷா...வாழ்க்கை கொடு...

கூவி கூவி 
அழைக்கிறாள் 
பூக்காரி
அந்த பூவைத்தான் 
கொஞ்சம் 

வாங்கிக் கொடேன்
என்னோடு 
கொஞ்ச நேரமாவது; 
உன்னோடு 
வாழ்ந்து விட்டு போகட்டும்...

யாமிதாஷா...எதார்த்தம்...உயிரே...

அருகில் தெரிந்தும் 
அணைக்க முடியா;
நிலவு நீ...

வெயிலில் கிடைத்தும் 

பருக முடியா 
கானல் நீர் நீ...

நினைவில் வந்தும்
கலைந்து போகும்
கனவு நீ...

நிஜமாய் இருந்தும்
நினைவாய்க் கொல்லும்;
என் உயிரே நீயடா...
வெட்கம்...எனது 
கற்பனையெல்லாம் 
வீணாப் போகுது;;;
அவன் - என் 
கவிதைகளை 
கண்டு கொள்ளாமல்
போகும் போது...


பாராட்டு...ரசிக்கிறேன் உன்னை...